CCSE 4 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா..!!
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (CCSE-IV) - 2022!!
Integrated Civil Services Selection - IV (CCSE-IV) - 2022 !!
★ அறிவிக்கை நாள் : 30.03.2022
★ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 28.04.2022
★ எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 24.07.2022
★ நேரம் : (முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை)
பணி :
◆ தமிழ்நாடு அமைச்சுப்பணி,
◆ தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி,
◆ தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி,
◆ தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணி,
◆ தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொழில் நுட்பமற்ற சார் நிலைப்பணி.
◆ தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப்பணிகள்.
★ ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 28.04.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
★ தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
★ பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கிதருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர். இதுபோன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரருக்கு ஏற்படும் எவ்வித இழப்புக்கும் தேர்வாணையம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.
★ இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே முழுப்பொறுப்பாவார்.
★ விண்ணப்பதாரர், தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் பொழுது, ஏதேனும் தவறு ஏற்படின், தாங்கள் விண்ணப்பித்த இணைய சேவை மையங்களையோ / பொதுச்சேவை மையங்களையோ குற்றம்சாட்டக்கூடாது.
★ விண்ணப்பதாரர் பு%2Bர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர் நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
ஒரு முறைப் பதிவு :
★ விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
★நிரந்தரப்பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும்.
★ அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நிரந்தர பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.

0 Comments